தேரத்லில் வாக்களிக்கும் வயது இனி 18 அல்ல 16.! நியூசிலாந்து நாட்டின் அதிரடி முடிவு.!

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16ஆக குறைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

அண்மையில் நியூசிலாந்து நாட்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் 16 மற்றும் 17 வயதுடையோருக்கு தேர்தலில் வாக்குரிமை அளிக்காமல் இருப்பது நியூசிலாந்து நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. என குறிப்பிட்டு தீர்ப்பு அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை நியூசிலாந்து பிரதமர் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்ற உறுப்பினர்களின் 75 சதவீத ஆதரவு தேவை.

உச்சநீதிமன்றம் இதனை அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என குறிப்பிடாத காரணத்தால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு கிடைத்து நிறைவேற்றப்படுமா என இன்னும் உறுதியாக தெரியவில்லை. உலகிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை கொடுத்த நாடு நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment