பீகார் தேர்தல்.. காலை 9 மணி நிலவரப்படி 6.74% வாக்குகள் பதிவு!

பீகார் மாநில முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.74% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, இன்று, 71 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் மொத்தமாக 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிஹாரில் மொத்தமாக 2.14 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடுபவர்களில் 31% பேர் மீது கிரீமினல் வழக்கு உள்ளது.

இந்தநிலையில், பீகார் மாநில முதற்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.74% வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முறைகேடுகள் நடக்கமால் இருக்க போலீசார் தங்களின் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.