கியார் புயலை தொடர்ந்து உருவானது மகா புயல் !நாளை அதி தீவிர புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம்

லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மகா’ புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம்  புயலாக மாறியது.இந்த புயலுக்கு  மகா’ புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘மகா’ புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் உள்ள நிலையில் இராண்டாவது ‘மகா’புயல் உருவாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் நிலைகொண்டுள்ளது. லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது.மேலும் தென்கிழக்குஅரபிக் கடல் பகுதிக்கு வரும் 31-ஆம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.