பிக் பாஸ் ஜூலியை பூஜை அறையில் தெய்வமாக வழிப்பட்டு வரும் தீவிர ரசிகர்.!

பிக்பாஸ் பிரபலமான ஜூலியின் புகைப்படத்தை தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டின் பூஜை அறையில் வைத்து தெய்வமாக வழிப்பட்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக களமிறங்கி போராடியதன் மூலம் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜூலி தற்போது சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஜூலியின் பிறந்தநாளை முன்னிட்டு           அவரின் புகைப்படத்தை  வெறித்தனமான ரசிகர் ஒருவர் வீட்டின் பூஜை அறையில் வைத்து தெய்வமாக வழிப்பட்டு வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்க எடிட்டிங் என்று நன்றாகவே தெரிந்த பின்னரும் சிலர் அதனை ட்ரோல் செய்தும், சிலர் இப்படி ஒரு ரசிகரா என்ற ஷாக்கிலும் உள்ளனர்.