பெரும் சோகம்..ஒகேனக்கல் அருகே 2 யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

ஒகேனக்கல் அருகே 2 யானைகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் 2 யானைகள் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்துள்ளது. அதில் போடூர் அருகே ஒரு ஆண் யானையும், கோடுபட்டி அருகே ஒரு பெண் யானையும் உயிரிழந்துள்ளது. கோடைகாலம் தொடங்கிய நிலையில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியே வருவதால் யானைகள் உயிரிழப்பது என்பது அதிகமாகி வருகிறது.

இதையடுத்து, இரண்டு யானைகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் போடூர் அருகே உள்ள ஆற்றில் இறந்தநிலையில் கிடந்த யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், கோடுபட்டி அருகே இறந்த பெண் யானையை வனத்துறையினர் உதவியுடன் மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

தற்பொழுது, இந்த யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதா.? அல்லது சேற்றில் சிக்கி இறந்துள்ளதுள்ளதா.? என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்ததும் இது குறித்த உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மாரண்டஹள்ளியில் மின்சார வேலியை கடக்க முயன்ற மூன்று யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment