பாரத் அரிசி 1 கிலோ ரூ.29…அடுத்த வாரம் முதல் விற்பனை – மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் வரத்து குறைந்ததால் சில்லரை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் 15% அளவுக்கு அரிசி விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாரத் அரிசி என்ற பெயரில் ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, ‘பாரத் அட்டா’வை கிலோ ஒன்றுக்கு 27.50 ரூபாய்க்கும், ‘பாரத் தால்’ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக ‘பாரத் அரிசி’ விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது அடுத்த வாரம் முதல் 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்ய தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் அரிசியின் விலை கடும் உயர்வை தொடர்ந்து ஏழை நடுத்தர மக்கள் அரிசியை வாங்க முடியாத சூழல் உருவானதால், விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மொபைல் வேன்கள் போன்ற அரசு நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் இந்த பார்த அரிசியை ரூ.29க்கு விற்பனை செய்யவுள்ளது.

முதலமைச்சரை விட ஆளுநர் அதிகாரம் படைத்தவரா.? திமுக எம்பி தாக்கல் செய்த தனிநபர் மசோதா.!

இதற்கிடையில், வர்த்தகர்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் அரிசி இருப்பு விபரத்தை, வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மத்திய அரசின் பொது வினியோகத் துறை இணையத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment