BGT2023: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு.!

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 4-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்தியாவும், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் வென்றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. மூன்றாவது போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் இன்று 4-வது போட்டியில், சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா சென்ற பேட் கம்மின்ஸ், இன்னும் இந்தியா திரும்பாததால் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இரு நாட்டு பிரதமர்களும் இந்த போட்டியை நேரடியாக மைதானத்தில் காண்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி: ரோஹித் சர்மா(C), ஷுப்மன் கில், செட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத்(W), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ்

ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (C), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (W), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன்

author avatar
Muthu Kumar

Leave a Comment