குழந்தையின் கை அகற்றம் -தமிழக அரசிடம் இன்று விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில்,  மருத்துவமனை நிர்வாகம் விசாரணை அறிக்கையை இன்று அரசிடம் சமர்பிக்கிறது. 

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது முகமதுமகீர் என்ற குழந்தையின் வலது கை அழுகிய நிலையில் அகற்றப்பட்டது. குழந்தையின் வலது கை அகற்றட்டப்பட்டதாகவும், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், நேற்று இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியது. 3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொண்டது. விசாரணையை தொடர்ந்து இன்று விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது.

RELATED ARTICLES