பிபிசி ஆவணப்படம் முடக்கம் – பிப்.6ல் விசாரணை!

பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிரான வழக்கு பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணை.

குஜராத் கலவரம் குறித்தான பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிரான வழக்கு பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றி பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

2002-ல் குஜராத் கலவரம் தொடர்பான ஆவண படத்தில் அப்போது குஜராத் முதல்வராக பதவியில் இருந்த பிரதமர் மோடி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை தடை செய்தது மத்திய அரசு. பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரங்கள் குறித்த பிபிசியின் ஆவணப்படத்திற்கு எதிரான மத்திய அரசின் தடை நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிரான பொதுநல மனுவை பிப்.6ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுநல மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி சந்திர சூட் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment