திருச்சி சிறப்பு முகாமில் 4 பேருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது – ஆட்சியர் பிரதீப்குமார்

திருச்சி சிறப்பு முகாமில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 7 பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டவர்களில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும், திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியானது.

இதுகுறித்து விளக்கமளித்த ஆட்சியர் பிரதீப் குமார், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. 4 பேரும் முகாமில் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லப்பட்ட தகவலில் உண்மையில்லை.

4 பேருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின், அவர்களை அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment