முதலாவது டி-20 யில் காற்று மாசுபாட்டால் வாந்தி எடுத்த பங்களாதேஷ் வீரர்கள்

டெல்லியில் காற்று மாசுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது பொதுமக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர் .இதனால் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது .தீபாவளிக்குப் பின்னர் டெல்லியில்  காற்றின் தரக் குறியீடு (AQI) ஆபத்தான விகிதத்தில் மோசமடைந்துள்ளது.பயிர்களிப்பு  மற்றும் பட்டாசுகளிலிருந்து வரும் புகை காரணமாக, புகைமூட்டம் நகரத்தை முழுவதுமாக மூழ்கடித்துள்ளது.முதலாவது டி-20 யின் போது பங்களாதேஷ் வீரர்கள் இதை உணர்ந்துள்ளனர்.
ஈஎஸ்பிஎன் கிரிகின்ஃபோ( ESPN Cricinfo  )வெளியிட்ட செய்தியில் , மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தின் போது பங்களாதேஷ் வீரர்களான சவுமியா சர்க்கார் மற்றும் ஒரு வீரர் வாந்தி எடுத்தனர்.டெல்லியில் நிலவிய காற்று மாசுபட்டால் போட்டியை மாற்றியமைப்பது பற்றி சில பேச்சுக்கள் இருந்தபோதிலும், அதற்கு போதுமான நேரம் இல்லாததால் அது சாத்தியமில்ல்லாமல் போனது . முதல் போட்டியின்  இடத்தை பி.சி.சி.ஐ மாற்றாதது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசனும் முன்னதாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

author avatar
Dinasuvadu desk