தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூர்! இன்று ராஜஷ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை!

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் ராஜஷ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகிறது.

இந்த சீசன் ஐபிஎல் போட்டியின் 19-வது போட்டி ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. நடப்பாண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

4 போட்டியில் 1 போட்டியில் மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றதன் காரணமாக புள்ளி விவர பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. அதைப்போல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி 3 போட்டியிலும் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.

இதற்கு முன் நேருக்கு நேர் 

இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 30 போட்டிகளில் மோதி இருக்கிறது. அதில் 15 போட்டிகளில் பெங்களூர் அணி தான் வெற்றிபெற்று இருக்கிறது. 12 போட்டியில் தான் ரஜாஸ்தான் அணி வெற்றிபெற்று இருக்கிறது. நேருக்கு நேர் வைத்து பார்க்கையில் பெங்களூர் அணி தான் அதிகமுறை வெற்றிபெற்று இருக்கிறது.

ஆனால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சரியான பார்மில் இருக்கிறது. எனவே, இன்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் எந்த அணி வெற்றிபெற போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. இந்த போட்டியில் பெங்களூர் வெற்றி பெற்று தோல்வியில் இருந்து மீளுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், சஞ்சு சாம்சன்(w/c), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல்

பெங்களுரு 

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (C), கிளென் மேக்ஸ்வெல் , கேமரூன் கிரீன், அனுஜ் ராவத் (WK), ரஜத் படிதார், அல்ஜாரி ஜோசப், தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ் , மயங்க் டாகர், யாஷ் தயாள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.