Banana Snacks : இந்த ரெண்டு பொருள் போதும்..! குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ஸ்நாக்ஸ் ரெடி..!

நம் குழந்தைகளுக்கு தினமும் ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதுண்டு. அவ்வாறு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, நாம் வீட்டிலேயே செய்து கொடுப்பது மிகவும் நல்லது. இது சுகாதாரமான முறையில் செய்வதோடு, குழந்தைகளுக்கு திருப்தியாகவும் செய்து கொடுக்கலாம்.

தற்போது இந்த பதிவில் வாழைப்பழம் மற்றும் முட்டையை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • வாழைப்பழம் – 2
  • முட்டை – 3
  • ஏலக்காய் தூள்

Banana Snacks செய்முறை : 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பவுலில் வாழைப்பழத்தை தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையை அதனுள் உடைத்து ஊற்றி, ஏலக்காய் தூள் தூவி நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் தடவி, கலக்கி வைத்துள்ள கலவையை தோசை வடிவில், குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் சிறிது சிறிதாக போட்டு, இருபக்கமும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.

இதனை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். செய்வதற்கான பொருள் குறைவாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.