அலுவலக நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.

மின்வாரிய ஊழியர்கள் பணியில் மொபைல் போன்களை பயன்படுத்த சிபிடிசிஎல் நிர்வாகம் தடை விதித்து ஆந்திர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில், அமராவதி மத்திய மின்பகிர்மான கழகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்தை தங்கள் மொபைல் ஃபோனில் வீணாக்குகிறார்கள், இதனால் அன்றாட அலுவலக வேலைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்பதால், சிபிடிசிஎல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜே பத்மா ரெட்டி, அலுவலக நேரத்தில் ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இருப்பினும், அதில் பணிபுரியும்  மூத்த அதிகாரிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அவசர காலத்திலும் பிறர் தங்களை தொடர்பு கொள்ள, ஊழியர்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் மொபைல் எண்ணை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment