அலுவலக நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.

மின்வாரிய ஊழியர்கள் பணியில் மொபைல் போன்களை பயன்படுத்த சிபிடிசிஎல் நிர்வாகம் தடை விதித்து ஆந்திர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில், அமராவதி மத்திய மின்பகிர்மான கழகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்தை தங்கள் மொபைல் ஃபோனில் வீணாக்குகிறார்கள், இதனால் அன்றாட அலுவலக … Read more

இண்டிகோ விமானத்தில் நடுவானில் தீப்பிடித்த பயணியின் மொபைல் …!

திருப்ருகரிலிருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் ஒன்றில் இருந்த பயணி ஒருவரின் மொபைல் திடீரென்று தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த விமானப் பணியாளர் உடனடியாக தீயை அணைக்கும் கருவி மூலம் அதனை அணைத்துள்ளார். இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 12.45 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறந்த நபரின் மொபைல் போனை திருடிய காவலர் பணியிடை நீக்கம் …!

இறந்த நபரின் மொபைல் போனை திருடிய கேரளாவை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கொல்லம், சாத்தனூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் தான் ஜோதி சுதாகர். திருவனந்தபுரம் மாவட்டம் பெருமத்தூரைச் சேர்ந்த அருண் ஜெர்ரி எனும் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரயில் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. அருணின் உறவினர்கள் அவரது உடலை பரிசோதிக்க வந்தபோது அவரது மொபைல் போன் உள்ளிட்ட பல விஷயங்கள் காணவில்லை எனவும், … Read more

டெல்லியில் மொபைல் போன் கொள்ளையடித்த வழக்கில் 22 வயது பெண் கைது!

டெல்லியில் பெண் ஒருவரிடமிருந்து மொபைல் போனை கொள்ளை அடித்த 22 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக டெல்லியில் உள்ள மங்கோல்புரி நகரை சேர்ந்த 72 வயது பெண்மணி ஒருவர், பெண் ஒருவரிடம் இருந்து மொபைல் போனை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மங்கோல்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து சுல்தான்பூரி காவலர்கள் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி உள்ளனர். … Read more

கணவரின் மொபைல் போனை உளவு பார்த்ததற்காக பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம்….!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை  உளவு பார்த்ததற்காக அபராதம் செலுத்துமாறு,அல் கைமாவில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்துள்ளார்.மேலும்,அவரது கணவரின் புகைப்படங்களையும்,பதிவுகளையும் மாற்றி,அவரது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு,கணவரை அவமானப்படுத்தியுள்ளார். இதனால்,அந்த பெண்ணின் கணவர்,தனது மனைவியின் நடவடிக்கைகளின் காரணமாக தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு,இழப்பீடு தரக் கோரி மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார். மேலும்,தனக்கு வேலை இல்லாததால் … Read more

இந்த செல்போன கண்டுபிடிச்சவன மிதிக்கனும் -அதிமுக அமைச்சர் ஆதங்கம்

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், தமிழக கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.அதனால், மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்ற செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

வோடஃபோன் நெட்வொர்க்கில் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என அறிவித்தது வோடஃபோன் நிறுவனம்…!!

சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் ஏர்செல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. கடைசியில், திவால் நோட்டீசை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏர்செல். அதன்பிறகு நேற்று (வியாழக்கிழமை) ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. பலருக்கு அழைப்புகள் செல்லவில்லை. ஏர்டெல்லுக்கு எதிராக சோஷியல்மீடியாவில் அனல் பறக்கும் கருத்துக்கள் பகிரப்பட்டன.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டது ஏர்டெல். இந்நிலையில் இன்று வோடஃபோன் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பரவலாக உள்ள நகர்புறம்,புறநகர் உள்ளிட்ட பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை. சிலருக்கு சிக்னல் இருந்தும் … Read more

வெளிநாட்டு செல்போன்களுக்கு வரி திடீர் உயர்வு!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனமான  பொருட்களுக்கு  செல்போன்களின் சுங்கவரி (customs duty ) 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால்  கலர் டிவி மற்றும்  மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட சாதனங்களின் சுங்கவரி 10% இருந்து 20% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்  உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.