தீபாவளிக்கு உ.பி.யில் 13 நகரங்களில் பட்டாசுகள் விற்க, பயன்படுத்த தடை.!

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடு காரணமாக நுரையீரல் பாதிப்பு, கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில் மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறிய நிலையில், பல்வேறு மாநிலங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் நவம்பர் 30 ஆம் தேதி வரை  உத்தரபிரதேச மாநிலத்தில்  உள்ள முசாபர்நகர், ஆக்ரா, வாரணாசி, மீரட், ஹப்பூர், காஜியாபாத், கான்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, பாக்பத் மற்றும் புலந்த்ஷஹர் ஆகியவை 13 நகரங்களில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

 இந்த முடிவு பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan