வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் – திருமாவளவன்

வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்கள் செல்ல செல்ல கொரோனா பரவல் தீவிரமாக காணப்படுகிற நிலையில், இதற்கிடையில் 10-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கு, அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தெலுங்கானா முதல்வர், 10-ம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம் என்றும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசிய திருமாவளவன் அவர்கள், கடந்த ஜூன் 3-ம் தேதி 10-ம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம் என்றும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அது எப்படி? என ஏளனம் செய்தனர். 

ஆனால் தெலுங்கானா முதல்வரால் மட்டும் எப்படி முடிந்தது? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் எனவும் கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.