SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! இன்று மாலை முதல் டிஜிட்டல் சேவைகள் இயங்காது…!

எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளங்கள் அனைத்தும், பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்படுகிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளது  இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து டிஜிட்டல் சேவைகள் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படும். இந்த தகவலை எஸ்பிஐ வங்கி முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளத்தில் மே 7-ஆம் தேதி 22:15 முதல் 8-ம் தேதி 1:45 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், இன்று மாலை முதல் யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை ஆகிய அனைத்தும் இயங்காது எனத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியை பொருத்தவரை சுமார் 85 மில்லியன் இன்டர்நெட் வங்கி வாடிக்கையாளர்களும், 19 மில்லியன் மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களும், 135 மில்லியன் யுபிஐ சேவை பயன்பாட்டாளர்கள் உள்ளனர். கடந்த மாதமும், எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் வங்கியல் சேவை தளமான யூனோ, யூனோ லைட், இன்டர்நெட் வங்கி சேவை இவை அனைத்தும் பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.