ஏடிஎம் கொள்ளை – கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் நீதிபதி தெய்வீகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 

நீதிமன்றத்தில் ஆஜரான கொள்ளையர்கள்:

atmthiruvanamalai

திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கில் கைதான ஹரியானவை சேர்ந்த 2 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். திருவண்ணாமலை நடுவர் நீதிமன்ற நீதிபதி தெய்வீகன் முன்னிலையில் ஹரியானாவில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப், அவனது கூட்டாளி ஆசாத் ஆகியோரை தனிப்படை காவல்துறை ஆஜர்படுத்தியுள்ளது.

காவலில் எடுக்க தனிப்படை தீவிரம்:

arrest

அதிகாலையில் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்த நிலையில், தற்போது இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இருவரையும் காவலில் எடுத்து கொள்ளை விவகாரத்தில் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

எஞ்சிய பணத்தை மீட்க போலீஸ் தீவிரம்:

TNPOLICE13

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.73 லட்சத்தில் ரூ.3 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. எஞ்சிய ரூ.70 லட்சம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வெளிமாநில கொள்ளையர்கள் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை திருவண்ணாமலை காவல்துறை தனிப்படை பிரிவினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் நேற்று கைது செய்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment