ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசல்.! 37 பேர் உடல் நசுங்கி பலி.!

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில், அந்நாட்டின் ராணுவம் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 1,500 பேரை புதிதாக பணியமர்த்த உள்ளதாகவும், இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் தலைநகர் பிரஸ்ஸாவில்லியில் நடைபெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

அந்த அறிவிப்பின் படி, பிரஸ்ஸாவில்லியில் உள்ள மைக்கேல் டி’ஓர்னானோ மைதானத்தில் நேற்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்தனர். அப்போது இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேரப் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அமைச்சரவை ஒப்புதல்.! 4 நாள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு.!

இதனால் இளைஞர்கள் அனைவரும் மொத்தமாக மைதானத்திற்குள் நுழைய முயற்சி செய்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் நிற்க முடியாமல் கீழே விழுந்து மற்றவர்களால் அவர்களை மிதித்துள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததோடு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பிறகு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கும், பிரஸ்ஸாவில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் 32 உடல்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஆட்சேர்ப்பு நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பதை இராணுவம் உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.