உச்சத்தில் தங்கம் விலை! இன்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு.!

Gold Price: கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த 10 நாட்களாகவே தங்கம் விலையானது வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.

அதன் படி பார்க்கையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (09-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் இன்று ரூ.80 உயர்ந்து ரூ.53,360க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,670க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.88க்கும், கிலோ வெள்ளி ரூ.88,000க்கும் மாற்றமின்றி விற்பனையாகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.