சிக்கலில் முன்னாள் ட்விட்டர் சிஇஓ, ஜாக் டார்சி; ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை.!

ஹிண்டன்பர்க் தனது ஆய்வில் அடுத்ததாக முன்னாள் ட்விட்டர் சிஇஓ, ஜாக் டார்சி நிறுவனத்தின் முறைகேடுகளை வெளியிட்டுள்ளது.

முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டார்சியின் நிதி தொடர்பான பிளாக் நிறுவனத்தில் அதன் பயனர் எண்ணிக்கையை அதிகமாகக் கூறியதாகவும், அதன் வாடிக்கையாளர் செலவைக் குறைத்து கணக்கு காட்டியதாகவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து கூறிய ஹிண்டன்பர்க் ரிசர்ச், எண்களின் 2 வருட ஆய்வில் பிளாக் நிறுவனம் மக்கள் தொகையை முறையாக பயன்படுத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க்கின் இந்த அறிக்கையை அடுத்து வர்த்தகத்தில் பிளாக்கின் பங்குகள் 18% சரிந்தன.

சமீபத்தில் அதானி குழும பங்குகள் குறித்து முறைகேடுகளை அறிக்கையாக ஹிண்டன்பெர்க் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அதானி குழும பங்குகள் $100 பில்லியனுக்கும் அதிகமான அளவில் சரிவை சந்தித்தது.

ஹிண்டன்பர்க்கின் சமீபத்திய அறிக்கையில், முன்னாள் பிளாக் ஊழியர்கள் தாங்கள் மதிப்பாய்வு செய்த, 40%-75% கணக்குகள் போலியானவை, மோசடியில் ஈடுபட்டவை என்று தெரிவித்துள்ளன. ஹிண்டன்பர்க் ரிசர்ச், கார்ப்பரேட் தவறுகளை கண்டறிந்து, நிறுவனங்களுக்கு எதிராக பகுப்பாய்வு செய்யும் ஒரு தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment