எச்சரிக்கை.. சில மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ள ஆம்பன்- மேற்குவங்கத்தில் ரெட் அலெர்ட்!

அதிதீவிர புயலாக உருமாறிய ஆம்பன் புயல், இன்னும் சில மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், அது மேற்குவங்கத்திலிருந்து 130 கி.மீ. தொலைவிலும், கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த புயல், வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்னும் சில மணிநேரத்தில் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கவுள்ளது.

இந்த புயலால், மணிக்கு 150-160 கி.மீ. வேகத்தில் காற்று விசவுள்ளதால், அவ்வப்போது 185 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசவுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும், 2 நாட்களுக்கு மத்திய மற்றும் வடக்கு கடல்பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த புயல் காரணமாக மேற்கு வங்காளத்தில் ரெட்-அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது 1999 ஆம் ஆண்டு ஒடிசாவை தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்தனர். அந்த புயல், 5 சூறாவளிக்கு சமமானது. அப்போது மிக கடுமையான சூறாவளி, 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. அதன்பிறகு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயலாக அம்பன் உள்ளது குறிப்பிடத்தக்கது.