உதவி பேராசிரியர் பணி – ஜனவரி 17 வரை விண்ணப்பிக்கலாம்!

அடுத்த ஆண்டு பிப்.21 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை உதவி பேராசிரியர் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்திய பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசியர்களுக்கான தேசிய தகுதி (யுஜிசி – நெட்) தேர்வுக்கு ஜனவரி 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை ugcnet.nta.nic.in என்ற இணைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்.21 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசியர்களுக்கான தேசிய தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளன. 83 பாடங்களில் கணினி அடிப்படையில் உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment