5 மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி.!

  • கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு பிறகு அஷ்ரப் கானி 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது. இவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா போட்டியிட்டார். இதனிடையே வாக்குசீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிபர் அஷ்ரப் கானி 923868 (50.64%) வாக்குகளை பெற்று 2-வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட அப்துல்லா 39.52% வாக்குகளை பெற்று தேர்தலில் தோல்வியை தழுவினார்.

பின்னர் அப்துல்லா சார்பில் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும், தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நிலையில் 2வது முறையாக எண்ணப்பட்ட வாக்குகளிலும் 50.64% வாக்குகளை பெற்று அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் அஷ்ரப் கானி 2வது முறையாக வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்