அசானி புயல் : 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!

வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 12 மணி நேரத்தில் அசானி புயல் தீவிர புயலாக வலுபெற்று ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் எனவும், இதனிடையே, தமிழகத்தில் இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.