அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.!

டெல்லியில் அமல்படுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், இதுவரையில், டெல்லி  அமைச்சராக  இருந்த சத்யேந்திர ஜெயின், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

இதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கவும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்பி வருகின்றனர்.  ஆனால் அவர் ஒருமுறை ஆஜரானதை தொடர்ந்து மீண்டும் இன்னும் ஆஜராகவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய என்று ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபங் குமார் வீடு, மாநிலங்களவை உறுப்பினர் என்.டி.குமார் வீடு அலுவலம் உள்ளிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் அதிதி கூறுகையில், அமலாக்கத்துறையினரை கொண்டு ஆம் ஆத்மி கட்சியை பயமுறுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயன்று வருகிறது  என குற்றம் சாட்டினார்.

Leave a Comment