மோகனுடன் ஸ்னேகா! வைரலாகும் ‘GOAT ‘ படப்பிடிப்பு புகைப்படம்!

தமிழ் சினிமாவில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விஜய் நடித்து வரும் கோட் (The Greatest of All Time) திரைப்படம் இருக்கிறது என்று கூறலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன்,ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

முதன் முதலாக ரிலீஸுக்கு முன்பு நிம்மதியா தூங்கப் போறேன்! விஸ்ணு விஷால் எமோஷனல்!

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த  புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி கொண்டு வருகிறது. நேற்று கூட விஜய்யை பார்க்க கூட்டமாக ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.

அத்தானை தொடர்ந்து  தற்போது படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் சினேகா மற்றும் மோகன் இருவரும் GOAT படப்பிடிப்பில் ஒன்றாக  எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஏற்கனவே, படத்தின் மூன்று லூக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GreatestOfAllTime
GreatestOfAllTime File Image
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment