பொங்கல் ரொக்கப் பணம் ரூ.1000 நியாயவிலைக் கடைகளில் கொடுக்க ஏற்பாடு!

பொங்கல் ரொக்கப் பணம் ரூ.1000 நியாயவிலைக் கடைகளில் கொடுக்க ஏற்பாடு என தமிழக அரசு தகவல்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்து ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் வரும் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்க பணம் மற்றும் பச்சரிசி, சக்கரை, முந்திரி, ஏலக்காய், நெய் உள்ளிட்ட பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்கலாமா? என அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

ரூ.1000 ரொக்கப் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதை விட ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் பொங்கல் ரொக்கப் பணம் ரூ.1000 நியாயவிலைக் கடைகளில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இடம் பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment