ஆம்பனிலிருந்து மீள ராணுவம் உதவி தேவை

ஆம்பன்  புயலால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்காக அத்தியாவசிய தேவைகளுக்காக இராணுவம் ஆதரவு வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி ராணுவத்தை நாடியுள்ளார். 

வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது.  இதனையடுத்து, 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான பாலங்கள், வீடுகள், மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தனர்.

இந்த புயலால் 80-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக மேற்கு வங்கம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பின்னர், மோடி மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடியும் , ஒடிஷாவிற்கு ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கினார். மேலும், புயலால் படுகாயம் அடைந்தோருக்கு ரூ.50,000 நிதி வழங்குவதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவைக்கபட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் மற்றும் குடிநீர் குழாய்களை சீக்கிரமாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், நெருக்கடி உள்ள பகுதிகளில் குடிநீர்களை வழங்குமாறு பொது சுகாதாரத்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் புயலால் சூறையாடப்பட்ட மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்பன்  புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட இராணுவம் ஆதரவு வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ராணுவத்தை  உதவியை நாடியுள்ளனர். எல்லாவற்றையும்  விரைவில் சரிசெய்த பின்னர் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.