Baby Care : உங்க குழந்தைகள் சளி தொல்லையால் அவதிப்படுகிறீர்களா..? அப்ப இதை கண்டிப்பா படிங்க..!

இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் சளி பிரச்னை தான். இந்த பிரச்னையை தொடக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் நாளடைவில் அது குழந்தையின் உடலுக்கு ஆபத்தை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாததால், குழந்தைகள் எளிதில் சளி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

சளி பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, மூக்கு ஒழுகுதல்,  தும்மல்,  தொண்டை அரிப்பு, இருமல், காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருந்தால், அவர்களுக்கு வெதுவெதுப்பான நீரில் மூக்கில் சொட்டு மருந்து விடலாம். சூடான நீராவி பிடிக்க வைக்கலாம். சூடான பால் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு சளி தொந்தரவு ஏற்படுவதற்கான காரணங்கள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள், குளிர் மற்றும் ஈரமான சூழல், சுகாதாரமற்ற சூழல் போன்ற பிரச்சனைகளால் பெரும்பாலும் சளி தொந்தரவு ஏற்படுகிறது.

சளி தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய புரதம் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். முட்டை, மீன், பால், பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.  ஆரஞ்சு, கிவி, தக்காளி, தர்பூசணி, கீரைகள் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.

அதேபோல் சளி தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு பழச்சாறு, தண்ணீர், பால், சூப் போன்ற திரவ உணவுகளை கொடுக்கலாம். சளி தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு கடுமையான, காரமான உணவுகள், ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.