நீங்கள் இந்த செயலியை பயன்படுத்துகிறீர்களா…? 2 கோடி பயனர்களின் தகவல்கள் கசிந்தது…!

‘ஷைனிஹண்டர்’ என்ற ஹாக்கர் குழு, பிரபல மளிகை பொருள் வினியோகம் செய்யும் பிக்பாஸ்கேட்டின் தரவு தளத்தை, ஹேக் செய்து, தகவல்களை கசிய விட்டுள்ளனர். 

இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இணையத்தில் தான் உலா  வருகின்றனர். இணையம் இன்று பலருக்கும் பொழுதை போக்கும் ஒரு இடமாக உள்ளது. தங்களது தேவைகளை இணையத்தின் மூலமாக பூர்த்தி செய்யும் வகையில்,  வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களில் இருந்து மற்ற அனைத்துப் பொருட்களுமே இணையத்தின் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்றனர். இதன் மூலம் பல வகையான சிக்கல்களும் ஏற்படுகிறது.

அந்த வகையில், ‘ஷைனிஹண்டர்’ என்ற ஹாக்கர் குழு, பிரபல மளிகை பொருள் வினியோகம் செய்யும் பிக்பாஸ்கேட்டின் தரவு தளத்தை, ஹேக் செய்து, தகவல்களை கசிய விட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மின்னஞ்சல்கள், பெயர்கள், கடவுச்சொற்கள், பிறந்த தேதிகள் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற தகவல்கள் கசிந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.