இலவசமா கிடைக்கும் சூரிய ஒளியின் நன்மைகள் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க?

Sunlight-சூரிய ஒளியின் நன்மைகள் மற்றும் எந்த நேர வெயில் சிறந்தது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

சூரிய ஒளி :

சூரிய ஒளியில் விட்டமின் டி அதிகமாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்த விட்டமின் டி சத்து உணவுகளில் மிக குறைவாகத்தான் கிடைக்கும் .அதுவும் ஒரு சில உணவுகளில் தான் இருக்கும்.

ஆனால் இயற்கையாகவும் இலவசமாகவும் அதிகமாக கிடைப்பது சூரிய ஒளியில்தான்.. நாம் தான் இலவசமாக கிடைப்பதை மதிப்பதில்லை.

சூரிய ஒளியின் நன்மைகள்:

  • காலை 6-8 இந்த நேரத்திலும் மாலை 5-6.30 இந்த நேரத்தில் கிடைக்கும் இதமான செந்நிற வெயிலே நம் உடலுக்கு ஆரோக்கியமானது.
  • இந்த சூரிய ஒளி நம் மீது படும் பொழுது நம் உடலில் உள்ள கொழுப்பு விட்டமின் டி யாக மாற்றப்படுகிறது. இந்த விட்டமின் டி சத்து கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களை உடல் உறிஞ்ச உதவுகிறது.
  • ஏனெனில் நம் எலும்பு பலமாக இருக்க கால்சியம் சத்து மிக அவசியமானது. அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு ஏற்படும் ரிக்கட்ஸ்  மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோராசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
  • ரத்தத்தில் வெள்ளை வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது.
  • நம் தூக்கத்திற்கு தேவையான மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும். இந்த மெலடோனின் இரவில் தான் சுரக்கிறது.
  • கண் பார்வை கோளாறுகள்  வராமல் தடுக்கிறது. இதனால் தான் பிறந்த குழந்தைகளை முதல் ஒரு மாதத்திற்கு சூரிய ஒளியில் மருத்துவர்கள் காட்டச் சொல்கிறார்கள்.
  • ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்ட்ரோசிரோன்  என்ற ஹார்மோனின் சுரப்பை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கிறது.
  • சூரிய ஒளி தோலில் படுவதால்  செரட்டோனின் சுரப்பியின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நம் நம்முடைய நரம்புமண்டலம்  பலம் ஆகிறது.தோல் அலர்ஜியை தடுக்கும் .
  • மேலும் தோல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஆனால் 11 30 -4.30  இந்த நேரத்திற்குட்பட்ட வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நேர வெயிலானது புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது.
  • நம் உடலில் பூஞ்சை தொற்று, நுண்கிருமிகளின் தொற்றுகளை அளிக்கும் திறன் சூரிய ஒளிக்கு உள்ளது. இதனால்தான் நாம் துணிகளை துவைத்து வெயிலில் காய வைக்கிறோம் .
  • வாரத்தில் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குறைவான ஆடை அணிந்து காலை வெயிலில் நிற்பதன் மூலம் சூரிய ஒளியின் முழு பலனும் பெற முடியும்.

இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு வேண்டுமென்றால் தினமும் 20 நிமிடமாவது காலை மாலை செந்நிற வெயிலில் நில்லுங்கள் .

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.