தலைகவசம் அணியவில்லையா.? 3 மணிநேர விழிப்புணர்வு வகுப்புக்கு தயார் ஆகுங்கள்.!

தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவோருக்கு, போக்குவரத்து விதிகள் குறித்து 3 மணிநேரம் விழிப்புணர்வு வகுப்பு நடைபெறும். –  கோவை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு. 

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகப்படுத்தியது . அதனை அந்த மாநிலங்கள் அமல்படுத்த ஆரம்பித்தன. அதன் படி தற்போது கோவையில் இந்த புதிய விதிமுறைகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அமல்படுத்தியுள்ளார்.

கோவையில் இந்த புதிய போக்குவரத்து விதிப்படி, தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டினால், 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், அப்படி தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவோருக்கு, போக்குவரத்து விதிகள் குறித்து 3 மணிநேரம் விழிப்புணர்வு வகுப்பு நடைபெறும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

100 சதவீதம் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஒட்டவே இந்த நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment