நீங்கள் SBI வங்கி வாடிக்கையாளரா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் நோக்கத்தோடுஅறிமுகப்படுத்தப்பட்ட, WE CARE ஃபிக்சட் டெபாசிட் திட்டம், 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு.

எஸ்பிஐ வங்கியானது, கடந்த மே மாதம் சீனியர் சிட்டிசன்களுக்கு ‘WE CARE’ என்ற ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது, கொரோனா காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த சிறப்பு திட்டமானது நீடிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்பிஐ இணைய பக்கத்தில், ‘எஸ்பிஐ WE CARE டெபாசிட் திட்டம் 2021-ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று பதிவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு மேலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 30 அடிப்படை புள்ளிகள் வட்டி வழங்கப்படுகிறது.

பொதுவாக ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில், ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான திட்டங்களுக்கு, எஸ்பிஐ 5.4% சதவீதம் வட்டி வழங்குகிறது. ஆனால் WE CARE சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்தால் 6.20 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.