கிரீன் டீ பிரியர்களா நீங்கள்? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

தற்போதைய காலகட்டத்தில் காபி டீ பிரியர்களை விட க்ரீன்டி  பிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர். அப்படி இந்த கிரீன் டீயில் என்னதான் இருக்கு என்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்..

கிரீன் டீயின் நன்மைகள்

பல ஆய்வுகளில் கிரீன் டீ குடிப்பதால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம் எனவும் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் க்ரீன்டியை   அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர் ஒரு நாளைக்கு  ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிப்பது தான் நல்லது.

கிரீன் டீயின் பக்க விளைவுகள்

  • கிரீன் டீயை இரண்டு கப்பிற்கு மேல் அதிகமாக நாம் எடுத்துக் கொள்ளும் போது நம் உடல் இரும்பு சத்து உறிஞ்சுவதை தடுக்கிறது, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை எடுத்துக்கொண்டே ஆக வேண்டும் என்றால் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து எப்போதாவது  எடுத்துக் கொள்ளலாம்.
  • க்ரீன்  டீயில் கஃபைன் அதிகமாக உள்ளது இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பதட்டத்தை ஏற்படுத்தும்.
  • வெறும் வயிற்றில் கிரீன் டீயை எடுத்துக் கொள்ளும் போது இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள கால்சியம் சிறுநீர் வழியாக வெளியேற்றி  இதனால் ஆஸ்டியோபொரோசிஸ்  வர கூட வாய்ப்புள்ளது.
  • கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ எடுப்பதை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் அது கருச்சிதைவை கூட ஏற்படுத்தலாம் மேலும் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள காஃபைன்  குழந்தைகளுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
  • மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் க்ரீன் டீயை  தவிர்ப்பது நல்லது இது மருந்துகள் வேலை செய்வதில் இடையூறு ஏற்படுத்துகிறது

எனவே இன்று மார்க்கெட்டுகளில் பலவிதமான ரசாயனம் கலந்த கிரீன் டீக்கள்  மற்றும் நிறமூட்டிகள் கலந்து விற்பனை செய்யப்படுகிறது இதனை தவிர்த்து தரமான க்ரீன் டீயை அளவோடு எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment