குடும்ப ஓய்வூதியம் பெறுபவரா நீங்கள்…? இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்….!

குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரத்திலிருந்து  1,25,000  உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரத்திலிருந்து  1,25,000  உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சருமான டாக்டர் ராஜேந்திர சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை இந்த முடிவு எளிதாக்கும். போதுமான நிதி பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கும்.

பெற்றோர்களின் இறப்பிற்குப் பிறகு ஒரு குழந்தை இரு குடும்ப ஓய்வூதியங்களைப் பெற வேண்டி இருப்பின், அதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அளவு குறித்த விளக்கத்தை ஓய்வு ஊதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அளித்துள்ளது என்றும், குடும்ப ஓய்வூதியர்களுக்கான அளவு மாதத்திற்கு ரூ.1,25,000-ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய அளவைவிட 2.5 மடங்கு அதிகம் என்றும்  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.