வெந்தயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

வெந்தயம் என்றாலே நாம் அனைவரும் உணவில் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருள் என்று தான் கருதுவதுண்டு. ஆனால், வெந்தயத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள் ஆகும்.

இதய பிரச்சனை 

நம்மில் பலருக்கு இன்று மிக இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தாலே, இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

நீரிழிவு பிரச்சனை 

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள், தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வருவத்துவது நல்லது. வெந்தய பொடியை, மோருடன் கலந்தும் குடிக்கலாம். வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

கொழுப்பு 

இன்று பலருக்கு உடல் எடை அதிகரிப்பு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது உடல் எடை அதிகரிக்க காரணமான கெட்ட கொழுப்புகளை கரைக்க வெந்தயம் மிகவும் உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்க செய்வதோடு, சர்க்கரை அளவை கட்டுக்களு வைக்கவும் உதவுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.