MGR ஆக மாறிய அரவிந்த்சாமி… இணையதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

எம்ஜிஆரின் 33வது நினைவு நாளையொட்டி  எம்ஜிஆராக தலைவி படத்தில் நடித்த அரவிந்த்சாமி ட்வீட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு நன்றியை கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்திலிருந்து சில புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கும் இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த்சாமியும் ஜெயலலிதாவதாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படத்துக்கான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் கூட ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஓட்டி ஜெயலலிதாவதாக கங்கனா ரனாவத் நடித்த புகைபடங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து இன்று எம்ஜிஆரின்
நினைவு தினம் என்பதால் நடிகர் அரவிந்த்சாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு மேல் “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பு. இயக்குனர் ஏ.எல்.விஜய் & தயாரிப்பாளர்களுக்கு நன்றி ” என்றும் பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.