புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிகாரிகள் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அமைந்து இருந்தது. இதனால் நாகையில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது. இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமியும் தெரிவித்தார். பின்னர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மயிலாடுதுறையை தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக  முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்ததற்கான அரசாணை  வெளியிடப்பட்டது . நாகப்பட்டினத்திலிருந்து பிரிக்கப்படும் மயிலாடுதுறை 38 ஆவது மாவட்டமாக தமிழகத்தில் உதயமானது .

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஸ்ரீ நாதா ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு  அறிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது