அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து மேலும் ரூ.27.9 கோடி ரொக்கம் பறிமுதல்!

அர்பிதா முகர்ஜியின் குடியிருப்பில் ரூ.28 கோடி ரொக்கம், 6 கிலோ தங்கம் பறிமுதல்.

மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கடந்த 23ம் தேதி கைது செய்திருந்தது. பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் சோதனையில் ஈடுபட்டது. இந்த ஊழல் நடந்தபோது மாநில கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, சுமார் 26 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

ஊழல் தொடர்பான சோதனையின்போது அர்பிதா முகர்ஜி வீட்டில் சுமார் ரூ.21 கோடி ரொக்கம், 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் அர்பிதா முகர்ஜிக்கு தொடர்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மேலும், ரூ.27.9 கோடி ரொக்கம் மற்றும் சுமார் 6 கிலோ தங்கத்தை அமலாக்க இயக்குனரகம் (ED) கைப்பற்றியுள்ளது.

ஒரே இரவில் எண்ணப்பட்ட பிறகு, நேற்று பெல்காரியா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்ட பணம் மொத்தம் ரூ.27.90 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிலோகிராமில் அளவிடப்படும் தங்க நகைகளின் சரியான மதிப்பு, விசாரணையாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு, தெற்கு கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் உள்ள அவரது மற்றொரு குடியிருப்பில் இருந்து 21 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத்தின் அளவு, 50 கோடி ரூபாய் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையின் போது, பல முக்கிய ஆவணங்களும் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டன. மம்தா பானர்ஜி அரசாங்கத்தில் கல்வி அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான சாட்டர்ஜி, முகர்ஜியின் டோலிகஞ்ச் குடியிருப்பில் பணம் பரிமுதல் செய்யப்பட்டதை அடுத்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment