அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை.. மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதால், மேலும் அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்லாய்ட் எனும் கறுப்பினத்தவரரை போலீசார் கழுத்தில் முட்டியை வைத்து நெரித்து கொலை செய்ததை கண்டித்து, அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. மேலும், உலகளவிலும் போராட்டங்கழும், வன்முறைகளும் நடந்தது. இந்நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞரை காவல்துறையினர் சுட்டு கொன்ற சம்பவம், மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் அதனை கண்டித்து, அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, அட்லாண்டா நகரில் உள்ள ஒரு உணவகத்தின் வெளியே கருப்பின இளைஞரான ரேஷார்ட் புரூக்ஸ் (27) என்பவர், தனது காரில் தூக்கக்கலகத்தில் இருந்தார். இதுகுறித்து உணவக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார், அவர் மது அருந்தினார் என சோதனை செய்ய முயன்றனர்.

அதற்க்கு அவர் மறுத்ததுடன், போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது போலீசாரை புரூக்ஸ் சுட முயன்றபோது, போலீசார் அவரை சுட்டனர். இதில் பலத்த காய்நமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி, மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டக்காரர்கள் சம்பவம் நடந்த பகுதியில் அமைந்த வென்டி உணவகம் மீது தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், காவல்துறை உயர் அதிகாரியான எரிக்கா ஷீல்ட்ஸ், தனது பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.