செப்டம்பர் 14-க்குள் வெளிநாடுவாழ் பொறியியல் படிக்கும் இந்திய மாணவர்கள் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!

பொறியியல் படிக்கும் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் செப்டம்பர் 14 ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
வெளி நாட்டில் வாழக்கூடிய இந்திய மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தையும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வகுப்புகளில் பங்கேற்க முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் 100 க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.
அவர்கள் கல்வி கட்டணத்தை ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, தவறினால் அபராத தொகையுடன் செப்டம்பர் 14ஆம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. அதன் பிறகும் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றும், வகுப்புகளில் பங்கேற்க முடியாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
author avatar
Rebekal