ஆந்திராவில் ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஆந்திரா கல்வி அமைச்சர்

ஆந்திராவில் ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், பல மாநிலங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில், கொரோனா வைரசால் பள்ளிகள் அனைத்து மூடப்பட்டுள்ள நிலையில்,  பள்ளிகளையும் புதுப்பிப்பதற்கான திட்டத்தை ஒரே நேரத்தில் அறிவித்து நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மீண்டும் பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும் என்று ஆந்திராவின் கல்வி அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் அரசு பள்ளிகளின் முழு உள்கட்டமைப்பையும் புதுப்பித்து, அவற்றை பெருநிறுவன பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் நோக்கம் கொண்டது. இதன் கீழ் சுமார் 45,000 பள்ளிகள் புதுப்பிக்கப்படும் ”என்று பள்ளி உள்கட்டமைப்பை புதுப்பிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து சுரேஷ் தெளிவுபடுத்தினார். மேலும், பெற்றோர் மற்றும் மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 1800 123 123 124 என்ற கட்டணமில்லா எண்ணையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.