அனாமிகா சுக்லா வழக்கு! இன்று மற்றொரு ஆசிரியை கைது.!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அனாமிகா சுக்லா என்ற பெயரில் வேலைக்குச் சென்ற அனிதா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை அனாமிகா சுக்லா என்பவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு,  கடந்த 13 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களில் இயங்கும் வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடரபான விசாரிக்க  மாநில தொடக்க கல்வி துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டார். இந்த விசாரணையில், அனமிகா சுக்லா பெயரில் சான்றிதழ்களை கொண்டு வேலை செய்து வந்த பிரியா சிங் என்பவரை  போலீசார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி உண்மையான அனாமிகா சுக்லா கல்வி அதிகாரி முன் ஆஜராகி, தனது கல்வி சான்றிதழ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என புகார் கொடுத்தார். அனாமிகா பெயரில் வேலை செய்பவர்கள் போலியானவர்கள். அனாமிகாவின் சான்றிதழ்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மோசடிக்கும், அனாமிகாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கல்வி அதிகாரி பிரஜாபதி கூறினார். 

இதையடுத்து, இந்த வழக்கில் மெயின்புரியை சேர்ந்த அனிதா தேவி என்ற மற்றொரு பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வேலையில் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. அனிதா தேவி கடந்த ஒரு வருடமாக ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். மேலும், அவரிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

author avatar
murugan