பிபிசி ஆவணப்பட தடை விவகாரம்.! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு ஏன் தடை செய்தது என அரசு சார்பில் 3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். – உச்சநீதிமன்றம் உத்தரவு. 

அண்மையில் பிபிசி செய்தி நிறுவனம் 2002இல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி , அப்போது குஜராத்தில் முதல்வராக இருந்த நேரத்தில் நடந்த குஜராத் கலவரம் பற்றி ஓர் ஆவண படத்தை தயார் செய்தது. அந்த ஆவணப்படமானது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறி அந்த ஆவணப்படத்திற்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்தது.

இந்த தடை உத்தரவை மீறி அந்த ஆவணப்படத்தை திரையிட்டு, திரையிட முயற்சி செய்து டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் மாணவர்கள் பலகட்ட போராட்டங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில், பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன் வந்தது. அப்போது, பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு ஏன் தடை செய்தது என மத்திய அரசு சார்பில் 3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை வருகிற ஏப்ரல் மாதம் வரையில் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment