தனது சம்பள பணத்தை போல 286 மடங்கு சம்பளத்தை பெற்ற ஊழியர்..! அடுத்தநாளே ராஜினாமா..! நடந்தது என்ன..?

சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு அவரது வாங்கி கணக்கில் தனது சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமாக ஊதியம் செலுத்தப்பட்டுள்ளது. 

சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு மாத சம்பளமாக ரூபாய் 43 ஆயிரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அவரது வங்கி கணக்கில் மே மாத சம்பளம் தவறுதலாக ரூபாய் 1.42 கோடி செலுத்தப்பட்டிருந்தது.

இதனை அந்த நிறுவன நிர்வாகம் உடனடியாக கண்டறிந்த நிலையில் தவறை கண்டுபிடித்து ஊழியரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்பி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு அந்த ஊழியரும் திரும்பி அளிப்பதாக கூறியிருந்தார். மேலும் தனது சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமாக ஊதியம் பெற்றதை வங்கி கணக்கை சரிபார்த்த பின்னர் இந்த ஊழியர் உணர்ந்து கொண்டார்.

அதனை மீண்டும் ஒப்படைப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் பணத்தை ஒப்படைத்து விடுவார் என்று நிறுவன ஊழியர்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென்று அந்த ஊழியர் ஜூன் இரண்டாம் தேதி தனது ராஜினாமா கடித்தை நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த நிறுவன நிர்வாகிகள் ஊழியரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரிடம் இருந்து பணத்தை சட்டபூர்வமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment