ப்ளூ டிக் பயனர்களுக்கு ஓர் அறிவிப்பு ! எடிட் வசதி அறிமுகப்படுத்தும் ட்விட்டர்.!

சமீபத்தில் ட்விட்டரில் நடந்து வரும் அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக ட்வீட் எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பயனர்கள் மாதந்தோறும் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார்.

இந்நிலையில் , டிவிட்டர் பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எடிட் செய்யும் வசதி தற்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுளது. பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் எடிட் செய்யும் வசதிகள் ஏற்கனவே இருக்கிறது.

ஆனால், டிவிட்டரில் ட்வீட் எடிட் செய்யும் வசதி இல்லை. தவறுதலாக பதிவிட்டால் அதை நீக்குவது தவிர வேறு வழியில்லை. தற்போது வெளியாகியுள்ள எடிட் பட்டன் குறித்த செய்தி டிவிட்டர் பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது டிவிட்டரின் இந்த எடிட் செய்யும் வசதி கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

author avatar
Aravinth Paraman

Leave a Comment