200 டாலருக்கு சாப்பிட்டு, 5,000 டாலர் டிப்ஸ் கொடுத்த அமெரிக்க பெண்.!

அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் செய்த காரியம் பெரும் திகைப்பையே ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் அந்தோணிஸ் அட் பாக்ஸன் என்ற இத்தாலிய உணவகத்தில், 18 வயதான மாணவர் கியானா டிஏஞ்சலோ என்ற பெண் 204.94 டாலர்களுக்கு உணவு உட்கொண்ட அவர், தனக்கு உணவு பரிமாறிய உணவக ஊழியருக்கு 5000 டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார்.

இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த உணவகத்தினர் தங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நன்றி என்றும் எங்களின் ஊழியர் ஒருவருக்கு நீங்கள் அளித்த ஆதரவு பெறும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் அவருக்கு இந்த பணம் மிகவும் உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் நர்சிங் மாணவி கியானா, இது தனக்கு இதுவரை நிகழ்ந்த ‘சிறந்த விஷயம்’ என்றும், 5,000 டாலரை தனது சக ஊழியர்களுடன் மட்டுமல்லாமல், இந்த கிறிஸ்துமஸில் அதிகம் தேவைப்படும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்