#Breaking : ஜெய்பூர் குண்டுவெடிப்பு – 4 பேருக்கு தூக்குத் தண்டனை

  • ஜெய்பூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
  • 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகரான ஜெய்ப்பூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒன்பது தொடர் குண்டுகள் 12 நிமிட இடைவெளியில் வெடித்தது.இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்ததாகவும் என்றும்  216 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.இந்த அமைப்பினை தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீதான வழக்கு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில் முகமது சயிப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சைபுர் ரஹ்மான் ஆகிய 4 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.ஷாபாஸ் உசேன் மீதான குற்றம்  நிரூபிக்கப்படவில்லை.இதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார். மேலும் நான்கு பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.இந்நிலையில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.